அடுத்த தேர்தலொன்று நடத்தப்படுவதற்கு முன்னர் 17வது திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமெனக் கோரி நீதிமன்றம் செல்வதற்கு
தீர்மானித்திருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,இதற்கு ஜே.வி.பி., லங்கா சமசமாஜக் கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முடிவெடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொதுச் செயலாளர் நிஸார் காரியப்பர், அடுத்த வாரத்தில் ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாடு காணப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படுமெனக் கூறியுள்ளார்.
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்றன இயங்காவிட்டால் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தமுடியாது. எனவே, 17வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.