கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு அருகாமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் உரிமையாளர் பிள்ளையானின் நண்பர் எனத் தெரியவருகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான ஜனா என்பவரது உந்துருளியே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
உந்துருளியின்; உரிமையாளரான ஜனா என்பவரை திருகோணமலை பொலிஸார் நேற்றைய தினம் மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜனா என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் எனவும், திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் வசிப்பவர் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட உந்துருளியின் உரிமையாளர் ஜனா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.