கிழக்கு மாகாணசபை உறுப்பினராக மௌனகுருசாமியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெயரிட்டுள்ளது.
கிழக்கு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு போனஸ் ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்றது.
இதன்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் போட்டியிட்ட மௌனகுருசாமி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜே.ஜீ.பிரியந்த பிரமேகுமார ஆகியோர் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் தேவையானளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவில்லை.
மௌனகுருசாமி மற்றும் பிரியந்த பிரேமகுமார ஆகியோரின் பெயர்கள் வர்த்தமானியில் பிரசூரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.