கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த வீரகுட்டி சுந்தரலிங்கம் என்பவதே அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளதாக பம்பலபிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்டவர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் சாரதி எனவும், அவர் தனது அலுவலகப் பணிகளுக்காக கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தங்ககம் ஒன்றில் தங்கியிருந்தார் என காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்டவர் தொடர்பான விசாரணைகளை பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.