17-05-2008
 |
|
|
|
| Article by:
uthsan s
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இலங்கையில் இருந்து மேலும் 26 பேர் அகதிகளாக கடல் வழியாக தமிழகத்திற்குச் சென்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதியிலிருந்து ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரே இவ்வாறு படகுகளில் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து சென்ற இவர்கள் கடல் மணல் தீடையில் நிர்க்கதியாகியிருந்த நிலையில் இந்திய கடற்படையினரால் மீட்டு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அகதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் தலா பத்தாயிரம் ரூபா பணம் கொடுத்து படகில் சென்றதாக கூறியுள்ளார். மேலும் கடலில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக இருந்தமையால் படகோட்டிகள் அதிகாலை 2 மணியளவில் மணல் மேடையில் தம்மை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாக அகதியொருவர் தகவல் அளித்துள்ளார்.இதன்பின்னர் இந்திய கடற்படையினரால் தாம் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் மேலும் கூறியுள்ளார். தனுஷ்கோடி காவல்துறையினர் இவர்களை விசாரணை செய்த பின்னர் மண்டபம் முகாம் அனுப்பி வைத்துள்ளனர்.
|