பூநகரிப் பிரதேசத்தை சேர்ந்த 32 கடற்றொழிலாளர்களுக்கு ஆறு இலட்சம் பெறுமதியான வலைகள் வழங்கும் நிகழ்வு பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாச கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முற்பகல் இடம் பெற்றது.
சமாசத் தலைவர் யோ.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.சி.ஆர்.சி.மாவட்ட இணைப்பாளர் இளங்கோ வலைகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இரண்டாம் விநியோகமாக எட்டுப் பேருக்கு இறால் வலைகளும் 24 பேருக்கு சிறகு வலைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.