News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இலங்கைக்கு இரு அரசுகள் தேவை - நீதியரசர் ஜோன் டவுட்

19-05-2008
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அவுஸ்திரேலியாவின் மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட், அந்த  இரு அரசுகளும்   கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். 
"இலங்கை இனச் சிக்கலின் அனைத்துலக பரிமாணம்" என்னும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார். வடக்கு-தெற்கு வேல்ஸ் (NSW) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஐட்ஜ் தலைமையில் இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

35-க்கும் அதிகமான அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், கொள்கை மையங்கள், மோதல் தணிப்பு நிறுவனங்கள் மற்றும் வடக்கு-தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலார்கள் போன்ற பல தரப்பினரும் பங்குபற்றிய நிகழ்வில் "இலங்கை இனச்சிக்கலின் இன்றைய பரிமாணம்" எனும் இந்த ஆவணம் வெளியிட்டு வைக்கப்பட்டது.


2007 ஆம் ஆண்டில் நீதியான சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மையம் (CJPD) ரன்ஸ்சென்ட் இன்டர்நசனல் எனும் அனைத்துலக கொள்கை வகுப்பு நிறுவனத்துடன் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்திய "இலங்கை இனச்சிக்கலின் அனைத்துலக பரிமாணம்" எனும் விடயம் தொடர்பான இருநாள் கருத்து அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துரைகள் மற்றும் விவாதங்களின் தொகுப்புக்கள் அடங்கிய இந்த ஆவணத்தில் அனைத்துலக புகழ்வாய்ந்த மோதல் தணிப்பு நிபுணர் பேராசிரியர் குல்டங், "தமிழ்நேசன்" இணையத்தளத்தின் ஆசிரியரும், கல்விமானுமாகிய நடேசன் சத்தியேந்திரா, லண்டன் பொருளாதாரப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுமேந்திரா பொஸ் ஆகியோரின் சிறப்பு உரைகள் பதிவாகியுள்ளன.  

அத்துடன் தமிழ்- சிங்கள- அனைத்துலக அறிஞர்களினால் கருத்து அமர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருந்தன. மேலும், முன்னாள் அமெரிக்கத் தூதுவர் லுன்சர்ட் அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பார்வை தொடர்பான கட்டுரையை சமர்ப்பித்திருந்தார்.


நிகழ்வுக்குத் தலைமை வகித்த நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஐட்ஜ், அனைத்துலக சமூகத்தின் தலையீடு பற்றிய விடயங்களை எடுத்தியம்பி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து ஆவணத்தினை அறிமுகப்படுத்தி உரையாற்றிய சிஜேபிடி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி அனா பராரஐசிங்கம் நூலில் பலதரப்பு பார்வையும் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் தலையீடு, மேற்கு - சீனா மற்றும் இந்தியத் தரப்புக்களிற்கு இடையேயான சிறிலங்கா தொடர்பான பொருளாதார, அரசியல் மற்றும் கேந்திர முக்கியத்துவம் சார்ந்த விவகாரங்கள் பதிவாகியுள்ளன.


மேலும் இந்த புவிசார் அரசியல் நோக்கிற்கு மாறான ஜனநாயக மீட்பு, மனித உரிமைகள் மற்றும் தாராளவாத சமாதானம் எனும் கோணத்தில் முன்வைக்கப்படும் பார்வையும் பதிவாகியுள்ளது என்பதனை சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் உரையாற்றிய அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்குப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனையும், அந்த  இரு அரசுகளும் கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனையும் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.

பங்கேற்ற அனைவரிற்கும் ஆவணம் வழங்கப்பட்டதுடன், நீதியான சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான மையத்தின் செயற்பாடுகள், நிதித்தேவைகள் தொடர்பான அறிமுகமும் செய்யப்பட்டது. 

இந்த ஆவணம் விரைவில் லண்டன் மற்றும் கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இனச்சிக்கலானது வெறுமனே தமிழ்-சிங்கள முரண்பாடு என்பதனைத் தாண்டி அதனில் அனைத்துலக தரப்புக்கள் வகிக்கும் பாத்திரம் தொடர்பான விவாதம் இனச்சிக்கலைப் புரிவதற்கும், அதனைத் தணிப்பதற்கும், நீதியான சமாதானத் தீர்வை தமிழ் மக்கள் பெறுவதற்கும் முக்கியமானது என்கின்ற நோக்குடன் இந்த ஆவணம் சிஜேபிடி அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.








 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions