இராணுவத்தில் இருந்து தப்பிசென்றவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துக்கொள்வதற்கான காலம் மேலும் இரண்டு வாரக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 16 ஆம் திகதி முடிவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் சுமார் நாலாயிரம் படைவீரர்கள் மீண்டும் சேவைகளில் இணைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதிக்கு பின்னர் படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மீண்டும் தமது சேவைகளில் இணைந்துக்கொள்ளலாம் என படைத்தலைமை அறிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இருந்து படைகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பிசென்றுள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் ஆயுதங்களுடன் தப்பிசென்றதுடன் அவற்றின் மூலம் தென்னிலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இவ்வாறானவர்கள் மீண்டும் படைகளில் இணைத்துக்கொள்ளப்படுவதன் காரணமாக கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுஷபட்டவர்களுக்கு தண்டனை வழங்கமுடியாத நிலை ஏற்படும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் யுத்தத்தை முன்கொண்டு செல்வதற்காக படையினரின் எவ்வித குற்றங்களையும் மூடிமறைக்கும் செயல்களையே மேற்கொண்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.