தமிழ் மக்களின் நட்புறவை வெளிப்படுத்தும் அடையாளமாக சென்னை மகாபோதி மத்தியஸ்தானத்தின் வெசாக் பூரணை உற்சவம் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சென்னை வெசாக் உற்சவத்தையொட்டி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை மகாபோதி, சங்கமானது, இலங்கை , இந்தியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆற்றிவரும் சமூக சமய நற்பணிகளில் ஒன்றாக சென்னை வெசாக் உற்சவமமைந்துள்ளது.
இன, மத வேறுபாடின்றி சிங்கள , தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த இந்து, பௌத்த கத்தோலிக்க சமய மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொள்ளும் சென்னை வெசாக் நிகழ்வு சிறப்பான இடத்தை வகிக்கின்றது. இதனால் சென்னை வெசாக் உற்சவமானது சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையிலான நட்புறவின் வெளிப்பாடாகும், இரு இனங்களுக்கு இடையிலான உறவுப்பாலமாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு சிறப்பு மிக்க நிகழ்வை ஏற்பாடு செய்த இலங்கை மகாபோதி சங்கத்திற்கும் சென்னை மகாபோதி மத்தியஸ்தானத்துக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நேற்று இரவு (18ஆம் திகதி) சென்னை மகாபோதி மத்தியஸ்தானத்தில் இடம்பெற்ற வெசாக் பூரணை உற்சவத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துச் செய்தியை சென்னை மகாபோதி மத்தியஸ்தானத்தின் பிரசார செயலாளர் சமன் அத்தாவுட வாசித்தார்