கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டவரான ஆறுமுகம் ஜெகன் என்பவரது கல்குடாவிலுள்ள வீட்டின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கல்குடா பொலிஸாரும் சம்பவத்தை உறுதிப்படுத்தினர். இரவு 7.10 மணியளவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத இருவரே வீட்டின் மீது இரு கைக்குண்டுகளை வீசி விட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒரு குண்டு மட்டுமே வெடித்ததுடன் மற்றைய குண்டு வெடிக்கவில்லையென்றும் கூறப்பட்டது.
சம்பவத்தில் குண்டெறியப்பட்ட வீடு சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.