வவுனியா மன்னார் வீதியில் (செக்டர் 7) 7 ஆவது பொலிஸ் காவல் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது இன்று காலை கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 7.20 மணிக்கு நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இரண்டு பொலிசார் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து அப்பகுதி படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்படுகிறது.