மன்னார் ரெலிக்கொம் சந்தியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடத்தபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கைகுண்டு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் 1/2 மணி நேரம் சரமாரியான துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதாகவும், பின்பு அதிகாலை 4.00 மணியளவில்,மன்னார் சவுத்பார்,நளவன்வாடி, பள்ளிமுனை மேற்கு ஆகிய பகுதிகள் படையினரால் சுற்றிவளைக்கபட்டு தேடுதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றிவளைப்பின்போது சிறிலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்ட பலர் அந்தந்த பகுதிகளில் வைத்து, தொடர்ந்து விசாரிக்கபட்டு வருவதாகவும், தெரிவிக்கின்றன.
இத் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.