யாழ்,தீவகம் மண்டைதீவு பகுதியில்,நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,கடந்த 17 ஆம் திகதி முதல், நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பாகவே இப்போர் ஒத்திகை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும்,இப் போர் ஒத்திகையின்போது கடற்படையினரின் நீரூந்து விசைபடகுகள் உலங்குவானூர்திகள் என்பன ஈடுபடுத்தபட்டதாகவும்,போர் ஒத்திகையை தொடர்ந்து யாழிலிருந்து தீவகம் செல்லும் பிரதான போக்குவரத்து பாதையான பண்ணை வீதியில் பிற்பகல் 3.00 மணியிலிருந்து நேற்று முன்தினம் வரை பயணிகள் போக்குவரத்துக்கு தடைவிதிக்கபட்டிருந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.