தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தமக்கு வழங்கப்படும் நிவராண உதவிகளை அதிகரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால், தமக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லையென ஈழத்தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
அகதிக் குடும்பத்தின் தலைவருக்கு மாதாந்தம் இந்திய ரூபாயில் 400 ரூபாவும், குடும்பத்தின் ஏனையவர்களுக்கு 288 ரூபாவும், 12 வயது பிள்ளைக்கு 180 ரூபாவும், 12 வயதிற்கு குறைந்த பிள்ளைக்கு 90 ரூபாவும் அடிப்படை நிவாரணமாக வழங்கப்படுகின்றன.
எனினும் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால் இலங்கை அகதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனரெனவும், இதன் காரணமாக தமது தங்க ஆபரணங்களை ஈழத்தமிழ் அகதிகள் அடகு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின், தமிழகத்தில் 65 ஆயிரம் ஈழத்தமிழ் அகதிகள் 113 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.