அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவஸ்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதலில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூவஸ்குளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாகவே இந்த சினைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக உள்ள காவலரணில் மூன்று விசேட அதிரடிப்படையினர் காவல் கடமையில் ஈடுபட்டுவருவதாகவும் அதில் ஒருவர் காவலரணுக்கு முன்பாக நின்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர் அம்பாறை போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியூடாகவே பொத்துவிலில் இருந்து கஞ்சிகுடிச்சாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதி நோக்கியதான வழங்கள் பாதை உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.