கிழக்கு மாகாணசபைக்கான மேலதிக ஆசன நியமனம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு தெரிவித்துள்ளது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் ரகு மாஸ்டர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டது.இதன் அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்த மேலதிக ஆசனத்திற்காக மட்டக்களப்பின் முன்னாள் அரசாங்க அதிபர் ஈ மோனகுருசாமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த பரிந்துரையை ஈ மோனகுருசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சிவகாந்தன் இறுதி முடிவை அறிவிப்பார் என ரகு மாஸ்டர் தெரிவித்தார்.