முல்லைத்தீவு பனங்காமம் பகுதியில் உள்ள கொம்புவைத்தகுளத்தில் நேற்று இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா பாலமோட்டை பகுதியில், ஏ9 வீதியின் மேற்குப் புறத்தில் கொம்புவைத்தகுளம் உள்ளது என்பது குறி;ப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளார்கள் .
எனினும், விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இடம்பெறுகின்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென இராணுவ தரப்பில் மறுப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது,