நாடுகளின் மனித உரிமை பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக நியூயோர்க்கில் நடைபெறுகின்ற இரகசிய வாக்கெடுப்பில் இலங்கை நிச்சயமாக வெற்றிபெறும் அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
நியூயோர்க்கில் இன்று நடைபெறுகின்ற வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இலங்கை தொடர்பாக மட்டுமல்ல பல நாடுகள் தொடர்பாக சில அமைப்புகள் பல்வேறு குற்றஞ்சாட்டுகளை முன்வைத்துள்ளன. குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற அமைப்புகள் அவற்றை ஒரு சம்பிரதாயமாகவே மேற்கொண்டுவருகின்றன இது தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்ல சர்வதேச சமூகமும் தெளிவான நிலையிலேயே இருக்கின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்ற விதம் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நாடுகள் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றன என்பதனால் இந்த தேர்தலில் நாம் நிச்சயமாக வெற்றிபெறுவோம். மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றஞ்சாட்டுகள் வாக்கெடுப்பில் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
மனித உரிமைகளை மதிப்பதற்காக அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமையினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் இலங்கை உறுதியான நிலையில் போட்டியிட்டு வெற்றிபெறும்.