யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் எறிகணைவீச்சு பீரங்கி நிலை மீதும், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடும் இடம் மீதும் இன்று காலை 6 மணிக்கு விமானப்படையினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளி;ன் பிரதேசத்தினுள் முன்னேறுகின்ற படையினருக்கு வான்வழி சூட்டு ஆதரவு வழங்கிவரும் விமானப்படையின் எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிக்கப்டர்களே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படையின் விங் கமாண்டர் அன்றூ விஜேசூரிய கூறியுள்ளார்.
முகமாலை இராணுவ முன்னரங்கத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதே இந்த விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்களை விமானப்படையினர் நடத்தியுள்ளனர்.