சீனாவில் அண்மையில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு விசேட வைத்திய குழுவொன்றை அந்நாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களும் தாதியர்களுமே இவ்வாறு சீனாவுக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
அவர்கள் இன்னும் சில தினங்களில் சீனா சிச்சுவான் நகரை நோக்கிப் புறப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனினும் சீனாவைக்குச் செல்லும் வைத்தியர்களதும், தாதியர்களதும் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லையென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியின் போது 71 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.