கிழக்கு மாகாணசபைகான தேர்தல் இடம்பெற்ற கடந்த 10 ஆம் திகதி முதல்,கிழக்கில் விடுதலை புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கொழும்பில் இயங்கும் சிங்கள நாளேடுகளும்,இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
தேர்தலுக்கு முன்னிரவு அம்பாறையில் ஹொட்டேல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு,இக் குண்டு தாகுதலை யார் மேற்கொண்டது என்பது தொடர்பில் இதுவரை தெளிவு இல்லை.தேர்தல் தினத்தன்று,திருகோணமலை அஸ்ரப் துறைமுக பகுதிக்குள் நிறுத்தபட்டிருந்த MV-Invincibile-520 என்ற கப்பல் மூழ்கடிப்பு,அதே தினத்தில் அம்பாறை பகுதியில் விடுதலை புலிகளால் நடத்தபட்டதாக தெரிவிக்கபடும் எறிகணை வீச்சு,அதனை தொடர்ந்து தற்போது கிழக்கில் இடம்பெற்றுவரும் சிறுசிறு தாக்குதல் சம்பவங்கள்,கிழக்கில் புலிகளின் தாக்குதல்கள் எதிர்காலத்தில் வேகமாக பரவும் ஏது நிலையை அடையாளபடுத்தி வருவதாக தெரிவிக்கபடுகிறது.
கிழக்கை இணைக்கும் தென் இலங்கையின் காட்டு பகுதிகளிலும் ஆங்காங்கே அவ்வப்போது இடம்பெற்று வருகின்ற தாக்குதல் சம்பவங்களும் புலிகளின் கிழக்கு மீதான அடுத்த கட்ட கெரில்லா பாணியிலான தாக்குதலுக்கான முன்னோட்டமாக அமைந்து வருவதை உணர்த்துவதாக கள நிலவர ஆய்வாளர்களால் பார்க்கபடுகிறது.கிழக்கிலிருந்து புலிகளை முற்றுமுழுதாக அப்புறபடுத்தி விட்டதாகவும்,கிழக்கை ஜனநாயகமயபடுத்திவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் பரப்புரைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,புலிகள் தற்போது கிழக்கில் மேற்கொள்ளும் சிறு,சிறு தாக்குதல் சம்பவங்கள் விரைவில் அரசாங்கத்தின் சர்வதேச கூச்சலுக்கு ஆப்பு வைப்பது போல மாறலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
புலிகளை பொருத்தமட்டில்,கிழக்கு தொடர்பாக தற்போது அவர்களது நோக்கம் எப்படி பட்டது என அரசாங்கத்தால் நோண்டி பார்ப்பது கடீனமான விடயம்.கிழக்கின் நிகழ்காலம் தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு சாதகமாக இருந்தாலும்,காலபோக்கில் புரள்வை ஏற்படுத்தகூடும்!விடுதலை புலிகளின் புலனாய்வு கட்டமைப்பை பொருத்தவரையில், அவர்களுக்குள்ளேயே செயற்பட்ட,ஒரு பிரிவை கட்டுபடுத்துவதோ,அல்லது அழிப்பதோ சாதாரண விடயம்.அப்படிபட்ட ஒரு கட்டமைப்புக்குள் உள்ளடங்குகின்ற அமைப்பாகதான் தற்போது T.M.V.P.யும் பார்க்கபடுகிறது.
எனவே கிழக்கை அரசியல்ரீதியிலும்,இராணுவரீதியிலும்,வெற்றி கொள்வது விடுதலை புலிகளின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கலாம்.அரசாங்கம் மண் குதிரையை நம்பி தற்போது ஆற்றில் குதித்துள்ளது.புலிகளின் மறைமுக மூலோபாயங்கள் கிழக்கில் வெளிபட துவங்கும்போது அரசாங்கத்தின் நிலைபாடு கிணறு வெட்ட பூதம் கிழம்பிய கதையாக மாறும்