மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய 10 பேரையும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.