நெதர்லாந்தில் “த ஹேக்” நகரில் அமைந்துள்ள, சர்வதேச நீதிமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர தகுந்த போர்க்குற்ற ஆதாரங்களுடன் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக காணாமல் போதலிற்கு எதிரான அமைப்பினால் இன்று (21.05.08) மதியம் 2மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக்கொண்ட இவ் நீதிமன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வழக்கினை தொடருகின்ற வகையில் இவ்நீதிமன்றின் வழக்கறிஞர்களின் சபையிடம் கையளிப்பதாக உறுதிஅளித்துள்ளனர்.
இதன்போது சில தமிழ் மக்களும், சில வெளிநாட்டவர்களும் இம்மன்றின் முன்னால் ஒன்றுகூடி மகிந்த அரசாங்கத்தின் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்களையும், பதாகைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தினையும் நடாத்தியிருந்தனர்.
மேலும், இவ்வழக்கை வேகப்படுத்துவதற்கு இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் இன்றைய நடவடிக்கை ஒரு ஆரம்பமே எனவும் இவ் அமைப்பின் செயலாளர் திரு. அனா தெரிவித்துள்ளார். இதற்காக இவர் பிரபலமான பலவழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனைகளையும் நடாத்திவருகின்றார்.