ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு உறுப்புரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது. 47 பேர் கொண்ட மனித உரிமைகள் சபையில் 15 இடங்களுக்கான தேர்தலே இன்று நடைபெறவுள்ளது. இந்த 15 இடங்களில் ஆசியப் பிராந்தியத்துக்கான 4 இடங்களுக்கு ஆசியாவைச் சேர்ந்த 6 நாடுகள் போட்டியிடுகின்றன.
இலங்கை, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்குத் தீமோர், பஹ்ரெய்ன் ஆகியன இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. பஹ்ரெய்னும் கிழக்குத் திமோரும் முதல் தடவையாக மனித உரிமைகள் சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.