நாட்டில், இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில்,தென்மேற்கு பருவ பெயர்ச்சி காரணமாக,பலத்த மழையுடன் கூடிய கடும் காற்று வீசும் என வானிலை அவதான நிலையத்தின் பதில் இயக்குநர் நாயகம் ஜீ.எம்.ஜயதிலக்க பண்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று காலை வானிலை அவதான நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவ பெயர்ச்சி காரணமாக மே,ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் பலத்த மழையுடன் கடும் காற்றும் காணபடும்.இந்த காலநிலை காரணமாக காலி,மாத்தறை,கம்பஹா,கேகல்ல,கண்டி,மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்படகூடும் எனவும்,எனினும் நெற்பயிர் செய்கைகான மழை வீழ்ச்சி,மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களுக்கு போதியளவு நீர்.தேயிலை உற்பத்தி அதிகரிப்புக்கான காலநிலை என்பன இந்த பருவ பெயர்ச்சியால் கிடைக்கும் நன்மைகளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்