22-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
அவுட்ரீச் இணையதளத்தின் முகாமையாளர் ஜசீகரன் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகச் சுதந்திர ஊடக அமைப்புத் தெரிவித்துள்ளது . அவுட் ரீச் இணையத்தளத்துடன் எவ்வித தொடர்புகளையும் பேணாத வளர்மதி என்ற ஜசீகரனின் மனைவிக்குத் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை. ஜசீகரன் மீது கட்டவிழ்த்துவிடப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான ஓர் பணயக் கைதியாக அவரது மனைவி பயன்படுத்தப்படுவதாகச் சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் அவ்வளவு கரிசனை காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜசீகரனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களைப் பார்வையிடச் சென்றபோது அவுட்ரீச் இணையதளத்தின் ஆசிரியர் திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டார் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்டிருந்தது. தடுப்புக் காவலில் வைத்து இந்த மூவரும் நடத்தப்படும் விதம் குறித்து அவதானிக்கும் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளமை தெளிவாகப் புலனாவதாகச் சுதந்திர ஊடக அமைப்பு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டுகின்றது. அவசரகாலச் சட்ட நீடிப்பின் காரணமாகத் தொடர்ச்சியாக அரசாங்கம் மக்கள் மீது பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கட்டவிழ்த்து விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு பரமேஸ்வரி முனுசாமி என்ற ஊடகவியலாளர் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது என அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல்கள் மற்றும் கைது செய்தல் போன்றவை தொடர்பாக அடிக்கடி அறிக்கைகளை வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எந்தவொரு நீதிமன்றத்திலும் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனச் சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை மிகவும் வேதனைக்குரிய நிலையாகவே காணப்படுவதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
|