மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து துணைப்படை பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார்.
இப் பேச்சு நடைபெற்றதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் பிள்ளையானிடம் தொலைபேசியில் ஹக்கீம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.