கிழக்கு மாகாண சபையின் முதலாவது சபை அமர்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாகாண சபையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் விளைவாகவே இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாணசபை அலுவலகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சிவணேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ததை அடுத்து இம்மாதம் 28ம் திகதி கிழக்கு மாகாண சபையின் முதலாவது சபை அமர்வு இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.