மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியனவே ஒருநாட்டின் சிறந்த ஆட்சியை மேலோங்கச் செய்யும் முக்கிய விடயமாக கருதப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோபிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜேர்மனியில் உள்ள பெட்ரிக் நௌமான் மன்றத்தின் 50வது நினைவுத் தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் புத்த பகவானின் போதையிலும் மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.