மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் ஈபிடிபியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளார்.
மன்னாரில் உள்ள ஈபிடிபி கட்சியின் முக்கிய உறுப்பினரான மோகன் என்று அழைக்கப்படுபவரே துப்பாக்கிச் சூட்டிற்கு இன்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இலக்காகியிருக்கின்றார்.
படுகாயமடைந்த நிலையில் அவரைப் படையினர் மன்னார் மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து மன்னாரில் பெரும் பதற்ற நிலை காணப்படுகின்றது. படையினர் வீதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.