ஆழிப்பேரலை மற்றும் யுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி.மனித உரிமைகள் ஆணைக்குழவின் திருகோணமலை அலுவலகம்ää எதிர்வரும் ஜூன் 2 ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடமாடும் சேவைகளை நடத்தவுள்ளது.
2 ஆம் திகதி ஈச்சிலம்பற்று பிரசேத செயலர் பிரிவுக்கு உட்பட்ட சண்பகா மகா வித்தியாலயத்தில் இந்த சேவைகள் நடத்தப்படவுள்ளன. 3 ஆம் திகதி மூதூர் செயலர் பிரிவில் உள்ள சென் அந்தனீஸ் வித்தியாலயத்தில் நடமாடும் சேவைகள் தொடரவுள்ளன மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்தோருக்கான செயற்திட்டம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக செயற்திட்ட அதிகாரி ஆர் அமலன் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த சேவைகளின்போது காழந்தாழ்த்திய இறப்பு, பிறப்பு மற்றும் காணாமல் போனோருக்கான இறப்பினை பதிவுசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆழிப்பேரலை மற்றும் யுத்த அனர்த்தங்களினால் காணாமல் போனதாக கருதப்பட்டு ஒரு வருடம் வரை கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு உறவினர்களின் விருப்பப்படி தற்காலிக இறப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை மற்றும் யுத்தம் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான 17 ஆம் மற்றும் 16 ஆம் சட்டங்களின் அடிப்படையிலேயே இந்த தற்காலிய இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமலன் அறிவித்துள்ளார்.