மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு மணல் குவாரிகளை ஏலம் மற்றும் டென்டர்கள் மூலம் தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையையே தொடரவும், அதில் முறைகேடுகளைக் களைய புதிய குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தது. திமுக ஆட்சிக்கு வந்த...
தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது வைகை திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளாவதில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
திண்டுக்கல் அருகே வெள்ளோடு பகுதியில் உள்ள மொட்டனம்பட்டி ரயில்வேகேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதிகாலை சோதனைக்கு சென்ற...
ஜெயலலிதா இரங்கல் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் மன்றத் தலைவர் டெய்லர் பி.மணி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றிய எம்ஜிஆர் மன்றத் தலைவர் டெய்லர் பி.மணி அகால மரண மடைந்து விட்டார்...
எல்லைப் பாதுகாப்புப்படையை நவீனப்படுத்த மத்திய அரசு உறுதி எல்லைப் பாதுகாப்புப்படை (பிஎஸ்எப்) நவீனமயமாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார். தில்லியில் பிஎஸ்எப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சனிக்கிழமை அவர் கூறியதாவது: பாகிஸ்தான், வங்கதேசத்துடனான சர்வதேச எல்லைப்பகுதியை பாதுகாக்கும் பணியில் செயல்படுகிறது எல்லைப்...
ஒகேனக்கல் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும்: இல.கணேசன் நம்பிக்கை கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்போகும் நிலையில், ஒகேனக்கல் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்தார். கர்நாடகத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர்...