இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கச்சதீவை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை அரசுடனான கச்சதீவு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் கச்சதீவு தொடர்பாகவும் கடல் எல்லை தொடர்பாகவும் இலங்கை அரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
குறித்த ஒப்பந்தங்களை ரத்துச் செய்து கச்சதீவை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
இந்த விடயம் குறித்து முதலமைச்சர் கருணாநிதி நேரடியாக டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களைச் சந்தித்து விவாதிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.