News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

56வது பிறந்தநாள்

01-03-2008
Article by:
Pradeep

தி.மு.க. தொண்டர் கள் அவரது பிறந்த நாளை இன்று தமிழ் நாடு முழுவதும் மிக வும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் பகுதியில் இனிப்புகள் வினி யோகித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
 
மாவட்ட அமைப்புகள் சார்பில் பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தன.
 
பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள முதல்-அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு வந்தார். அவரி டம் ஆசி பெற்றார். தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தி னர் அனைவரும் மு.க.ஸ்டா லினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
7.30 மணிக்கு கோபால புரத்தில் இருந்து புறப்பட்டார். 7.45 மணிக்கு அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்துக்கு வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று "தளபதி வாழ்க '' என்று கோஷமிட்டு தாரை தப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
 
குறிஞ்சி இல்ல வளாகத்தில் தனி மேடை அமைக்கப்பட்டி ருந்தது. முக்கிய பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அமர துணிப்பந்தல் போட்டி ருந்தனர். தி.மு.க. தொண்டர்கள் வரிசையில் வந்து வாழ்த்து தெரிவிக்க கட் டைகள் மூலம் தடுப்பு உரு வாக்கப்பட்டிருந்தது.
 
மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்ததும் பிறந்தநாள் விழா நடந்தது. ஆயிரம் விளக்கு தொகுதி சார்பில் அன்பகம்கலை, நுங்கை வி.எஸ்.ராஜ், அன்புராஜ் ஆகிய மூவரும் பெரிய கேக் தயார் செய்து வைத்திருந்தனர். மு.க.ஸ்டாலின் அந்த "கேக்''கை வெட்டி தொண்டர்களுடன் தனது பிறந்தநாளை கொண் டாடினார்.
 
அப்போது தி.மு.க.தொண் டர்கள் கரகோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். தாரை தப்பட்டைகள் முழங்கின. தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன் பழகன் முதல் `கேக்'கை மு.க. ஸ்டாலினுக்கு ஊட்டி விட்டார். பிறகு முக்கிய பிரமுகர்களுக்கு இனிப்பு வினியோகிக்கப்பட்டது.
 
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க அதிகாலை 5 மணியில் இருந்தே குறிஞ்சி இல்லம் முன்பு தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் வரிசையில் வந்து ஸ்டாலினுக்கு பூங்கொத்து மற்றும் பொன் னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
அமைச்சர் கோ.சி.மணி பொன்னாடை போர்த்தி மு.க.ஸ்டாலினை வாழ்த் தினார். அவருக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின் பிறகு கோ.சி.மணி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
 
அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்தபோது மதுரை யில் இருந்து மு.க.அழகிரி போன் மூலம் ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
 
"தினத்தந்தி'' அதிபர் பா.சிவந்திஆதித்தன், மத்திய மந்திரி இளங்கோவன், எழுத்தாளர் ஜெயகாந்தன், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகி யோர் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர்.
 
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஸ்டாலின் 56 வயது குறிக்கும் வகை யில் 56 செவ்வாழை,56 பலா, 56 மாம்பழம் என முக் கனிகளை கொண்டு வந்து மு.க.ஸ்டாலினை வாழ்த் தினார். அவர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து வந்து உற்சாகமாக பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.
 
கே.கே.நகர் பகுதி செய லாளர் தனசேகரன் 500 ரூபாய் நோட்டுக்களை கோர்த்த பெரிய மாலையை மு.க.ஸ்டாலினுக்கு அணி வித்து வாழ்த்து தெரிவித்தார். அது போல ஏராளமான தொண்டர்களும், ஸ்டாலி னுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர்.
 
புதுச்சேரியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவர் 1 1/2 கிலோ எடையிலான வெள்ளியில் மு.க.ஸ்டாலின் உருவச் சிலையை வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அது போல ஏராளமான தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வித்தியா சமான பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.
 
மு.க.ஸ்டாலினின் சகோத ரர் மு.க.தமிழரசு மற்றும் கனிமொழி எம்.பி, நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.
 
மு.க.ஸ்டாலின் அக்கா செல்வி குடும்பத்தோடு வந்தி ருந்து வாழ்த்தினார்.
 
மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி மருமகள் கிருத்திகா மேடைக்கு வந்து பிறந்த நாள் வாழ்த்து தெரி வித்தனர். ஸ்டாலின் காலில் விழுந்து அவர்கள் ஆசிப் பெற்றுக் கொண்டனர். அப்போது மு.க.ஸ்டாலின், கிருத்திகாவிடம் இருந்த தன் பேரன் இன்பநிதியை வாங்கி தோளில் போட்டு கொஞ்சினார்.
 
இதையடுத்து மு.க.ஸ்டா லின் மகள் செந்தாமரை மருமகன் சபரீஸ்வரன் மேடைக்கு வந்து வாழ்த்தினார்கள்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் 56 சீர்வரிசையுடன் வந்து மு.க. ஸ்டாலினை வாழ்த்தினார் கள்.
 
56 பெண்கள் தட்டு ஏந்தி பழம், காய்கனிகள் என முக்கனி சீர்வரிசையுடன் வந்து வாழ்த்தியது வித்தியாசமாக இருந்தது.
 
சென்னை 141-வது வட்ட தி.மு.க. கவுன்சிலர் 56 ஆயிரம் ரூபாய் நோட்டு மாலையை மு.க. ஸ்டாலினுக்கு அணிவித்தார்.
 
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர் கள் வருமாறு:
 
சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, ராதிகாசெல்வி, ரகுபதி.
 
தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், வீரபாண்டி ஆறு முகம், பரிதிஇளம்வழுதி, ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, கே.என்.நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென் னரசு, எ.வ.வேலு, தமிழரசி, கீதாஜீவன், பூங்கோதை.
 
மாலைமலர் நிர்வாக இயக் குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன்.
 
முதல்-அமைச்சர் கருணா நிதியின் உதவியாளர் சண்முக நாதன்.
 
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மேயர் மா.சுப்பிரமணியம், துணை மேயர்சத்தியபாமா, மதிவா ணன், முன் னாள் எம்.எல்.ஏ.சைதை கிட்டு,மாவட்ட செயலாளர் கள் பெரிய சாமி (தூத்துக்குடி), செங்குட்டுவன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி), கருப்பசாமி பாண்டியன்(நெல்லை). பலராமன் (வடசென்னை).
 
எம்.எல்.ஏ.க்கள் ராஜகண் ணப்பன், அப்பாவு, ராஜா, வி.எஸ்.பாபு,பா.ரங்கநாதன் முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், கோவை மேயர் காலனி வெங்கடாசலம், திருப்பூர் மேயர் செல்வராஜ், டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், தி.மு.க. தலைமை கழக நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவன். தமிழச்சி, எல்.கணேசன் எம்.பி.,
 
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஆரூண் எம்.பி. ராயபுரம், மனோ.
 
ஜனநாயக முன்னேற்றக் கழ கத்தலைவர் ஜெகத்ரட்சகன், நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், பாரதீய ஜனதா நிர்வாகி காசிமுத்து மாணிக்கம்.
 
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி.
 
நடிகர்கள் சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து, கவிஞர் வைரமுத்து, பா.விஜய், இசை அமைப்பாளர் சங்கர்- கணேஷ்.
 
தலைமை செயலாளர் திரிபாதி, உள்துறை செய லாளர் மாலதி, காவல் துறை உயர் அதிகாரிகள், கமிஷனர் நாஞ்சில் குமரன், ஜாங்கிட், சுனீல்குமார், ராம சுப்பிரமணியம், ரவி.
 
ராஜ் டிவிகுழுமத்தின் நிறுவனர் ராஜேந்திரன், முன் னாள் அமைச்சர்கள் பேராசி ரியர் மருங்காபுரி பொன்னு சாமி, இந்திரகுமாரி, புதுவை முன்னாள் முதல்-மந்திரி ஜானகிராமன், நாஜிம், நளினி சாரங்கி.
 
சென்னை தி.மு.க. பகுதி செயலாளர்கள் சுரேஷ் குமார்,வி.எஸ்.ரவி, மணி வேலன், அன்புத் துரை.
 
மண்ணடி உசேன், சுந்தரம், புகழேந்தி, சாதிக் அஜீஸ், வி.எஸ்.ஜே.சீனிவாசன்.
 
அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ராஜாராம், ராஜேஷ் லக்கானி, என்ஜிஓ சங்க தலைவர் சூர்யமூர்த்தி, தி.நகர் வியாபாரிகள் சங்க தலைவர் அலிமாசம்சுகனி.
 
அதிகாலையில் திரண்ட தொண்டர்கள் கூட்டம் மதியத்துக்குப் பிறகும் அலை, அலையாக வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்திருந்தனர். பெரும் பாலானவர்கள் மு.க. ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்.
 
இதனால் மேடை அருகில் பொன்னாடைகள் மலை போல குவிந்திருந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வந்தது, அந்த பகுதியை விழாக் கோலமாக்கி இருந்தது. ஒரு தொண்டர் படை ஒட்டங்களை அணி வகுக்க செய்தது வித்தியாசமாக இருந்தது.
 
தி.மு.க. தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்த தால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங் காங்கே குடிநீர் வசதி செய்யப் பட்டிருந்தது.
 
குறிஞ்சி இல்லத்தின் பின் பிறத்தில் பந்தல் போட்டு விருந்து பரிமாறப்பட்டது. வெளிமாவட்ட தொண்டர்கள் சுடச்சுட பிரியாணி சாப்பிட்டு சென்றனர்.
 
கே.கே.பகுதியில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பகுதி செயலாளர் க.தனசேகரன் தலைமையில் அனைத்து வட்டங்களிலும் கொண்டாடப்பட்டது.
 
130-வது வட்டத்தில் வட்ட செயலாளர் முருகவேல் தலைமையில் கொடியேற்றி தோரணங்கள் கட்டி ஆயிரம் பேருக்கு இனிப்புவழங்கி கொண்டாடப்பட்டது. சூளைப்பள்ளம் பகுதியில் முத்து தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ராணி அண்ணா நகரில் அரங்கநாதன் தலைமையில் 56பேருக்கு குடம், வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
 
அன்னை சத்யாநகர் பகுதியில் வள்ளிநாயகம் தலைமையில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. அம்மன் கோவில் அருகில் மாவட்ட பிரதிநிதி முருகேசன் தலைமையில் 1000 பேருக்கு சர்க்கரைப் பொங்கல் வழங் கப்பட்டது.
 
காணு நகர் பகுதியில் குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோருக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டன. கே.கே.நகர் மேற்கில் இளைஞர் அணி அமைப்பாளர் துரைராஜ் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
 
சாலிகிராமம் பகுதியில் கவுன்சிலர் முத்துவேல் தலைமையில் 56 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடையும், இனிப்பும் வழங்கி கொண்டா டப்பட்டது. ஜெ.ஜெயராமன், துரையரசன், உமாபதி, புல்லட் முருகன், நெல்லை சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
சிவலிங்கபுரம் பகுதியில் பாபு தலைமையில் 560பள்ளி சிறுவர்களுக்கு நோட்டு புத் தகம் வழங்கப்பட்டது.
 
மு.க.ஸ்டாலினுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாழ்த்து
 
இன்று பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருவண் ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் ஒட்டகம், குதிரையுடன் ஊர்வலமாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். 56 பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அமைச்சர் ஸ்டாலினுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாலை அணிவித்தனர்.

 Other Articles
•  17 May 2008 01:33:00 கேரள நடிகர்களை மிரள வைத்த விஜய்
•  17 May 2008 01:32:00 அரசாங்கம்
•  17 May 2008 01:26:00 தீவிரவாதிகள் திடுக்கிடும் தகவல் : ராமகோபாலனை கொல்ல சதி
•  17 May 2008 01:21:00 ஜெயசூர்யா விளாசல்: மும்பை சூப்பர் வெற்றி
•  17 May 2008 01:17:00 பர்மா சூறாவளில் 78,000 பேர் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:15:00 கொல்கத்தா நீதிமன்றத்தின் தடை உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது
•  17 May 2008 01:10:00 அனுபவிக்க வேண்டிய வளமா? பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமா?
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:54:00 சாதனையாளர் சந்திரசேகரன் சாலினியைப் பாராட்டிக் கொளரவிப்பு
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:54:00 கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு
•  16 May 2008 15:37:00 மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை அதிகரிக்கும்.
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:36:00 டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி
•  16 May 2008 14:30:00 ஆர்டிக் கடலில் புதைந்து கிடக்கும் ரகசிய புதையல்
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions