நாகலாந்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வருகிற 5 ம் தேதியன்று நாகலாந்து சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பல்வேறு கட்சித் தலைவர்களும் அங்கு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மோகாக் சங் மற்றும் திமாபூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் இன்று தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அவரது வருகையையொட்டி பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.