News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை

02-03-2008
Article by:
Pradeep

பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
 
ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.இவர் 90களில் மிகப் பிரபலமான எழுத்தாளராக விளங்கியவர்.அனைத்து முன்னணி வார இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.விகடனில் வெளிவந்த அவரது ' அது ஒரு கனாக்காலம் ' தொடர் நாவல் அப்போது வாசகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற ஒன்றாகும்.
 
67 வயதான ஸ்டெல்லா புரூஸின் இயற்பெயர் ராம் மோகன்.கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனது மனைவியுடன் அவர் வசித்து வந்தார்.சமீபத்தில்தான் ஸ்டெல்லா புரூஸின் மனைவி மரணமடைந்தார்.ஏற்கனவே வறுமையில் வாடிய ஸ்டெல்லா புரூஸூக்கு, மனைவியின் இழப்பு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இன்று காலை அவர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இன்று காலை அவரது வீட்டுக்கு வேலைக்காரப் பெண் வந்துள்ளார்.அவரது அறையை அவர் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் ஸ்டெல்லா புரூஸின் உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.இதனையடுத்து அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், மனைவியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக எழுதி வைத்துள்ளார்.
 
கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார்.அவரது இழப்பால் ஏற்பட்ட துயரத்திலிருந்து தமிழ் எழுத்தாளர் உலகம் மீள்வதற்குள், ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions