News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

பாராளுமன்ற தேர்தல் சோனியா ஆலோசனை: எம்.பி.க்களிடம் கருத்து கேட்கிறார்

03-03-2008
Article by:
Pradeep

ஆனால் அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.
 
காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தோழமை கட்சிகளான இடது சாரிகளுக்கும் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் கடந்த ஆண்டு உரசல் ஏற்பட்ட போது உடனடியாக தேர்தல் வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தசம யத்தில் ராமர் பாலம் பிரச்சினை விசுவரூபம் எடுத்ததால், வட மாநில மக்கள் தங்களுக்கு ஓட்டு போடமாட் டார்கள் என்ற பயத்தில் காங் கிரஸ் அதிரடி முடிவு எடுக்க தயங்கியது.
 
இதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங் களில் தோல்வி ஏற்பட்டதால், காங்கிரஸ் முழுமையாக பதுங்கியது.
 
மக்கள் மனநிலையில் மாற் றம் ஏற்பட்டு, தங்களுக்கு சாதகமான அலை வீசும் வரை காத்திருக்க காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் தற்போது பட்ஜெட் வடிவில் கிடைத்துள்ளது. ரெயில்வே பட்ஜெட்டில் பெண்களுக்கு நிறைய சலுகைகளையும், புதிய திட்டங்களையும் வாரி வழங்கி லல்லு பிரசாத் அசத்தினார்.
 
அது போல பொது பட்ஜெட்டை வழங்கிய ப.சிதம்பரம் நாடெங்கும் உள்ள மக்கள் மனதில் சுமையை குறைத்து, மகிழ்ச்சியையும் திருப்தியையும் உருவாக்கி உள்ளார். வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி இரண்டும் நாடெங்கும் காங்கிரஸ் மீதான இமேஜை உயர்த்தி இருக்கிறது.
 
சேதுசமுத்திர திட்டம், அணுசக்தி ஒப்பந்தம் விஷயங் களிலும் சர்ச்சைகளை ஓய்த்து விட்டு, தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை காங்கிரஸ் உரு வாக்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம் பிடித்து, ஓட்டுக்களை பெற காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாகி உள்ளனர். வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தினால் கணிசமான வெற்றியை பெற்று பாராளுமன்றத்தில் தங்கள் பலத்தை வலுவாக்க முடியும் என்று சோனியா கருதுகிறார்.
 
நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடத்த சில காரணங்கள் இருப்பதாக நிபு ணர்கள் கூறுகிறார்கள். முதலாவது காரணம்-இடது சாரிகளின் பிடிவாதமான மிரட்டல், இன்னும் சில மாதங்களில் அவர்கள் ஆட்சிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவார்கள் என்று காங்கி ரஸ் எதிர்பார்க்கிறது.
 
அடுத்து தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி வரும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதம் பள்ளி இறுதித் தேர்வு தொடங்கி விடும் என்பதால் அவரும் முன் கூட்டியே தேர் தல் நடத்தும் திட்டத்தில் உள்ளார்.
 
மூன்றாவதாக வரும் நவம் பர் மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த 3 மாநி லங்களிலும் பா.ஜ.க. அரசு மீது மக்களிடம் கடும் அதிருப்தி உள்ளது.
 
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசுவ தாக தெரிகிறது. எனவே நவம் பர் மாதம் இந்த 3 மாநில சட்ட சபை தேர்தலுடன் சேர்த்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் பா.ஜ.க. எதிர்ப்பு அலை ஓட்டுக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
 
இந்த சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் பிப் ரவரிக்குள் பதில் சொல்ல வேண்டும் என்று முன்பு இந்தியாவுக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது. தற் போது இந்த நிபந்தனை ஜுலை மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
எனவே அதுவரை ஆட் சியை ஒப்பேற்றிக் கொண்டு போய் விட்டு, பிறகு மக்களை சந்திக்கலாம் என்று காங்கி ரசார் நினைக்கிறார்கள்.
 
நவம்பர் மாதம் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள சோனியா, அதற்கு முன் னதாக மக்களை காங்கிரஸ் பக்கம் திருப்ப அதிரடி நடவ டிக்கைகளை தொடங்கி இருக்கிறார். அதன் படி 6 மாநிலங் களில் மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் பொதுக் கூட்டம் வரும் 9-ந் தேதி டெல்லியில் ராமலீலா மைதானத்தில் நடக்கிறது. அதன் பிறகு கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், காஷ்மீர் மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
 
இந்த பொதுக் கூட்டங்களில் சோனியா, பிரதமர் மன் மோகன்சிங் கலந்து கொண்டு பேசுகின்றனர். பொதுக் கூட் டங்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்த 6 மாநிலங்களிலும் இந்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடக்க
உள்ளது.
 
இதற்கிடையே தேர்தல் ஆயத்த பணிகளை முடுக்கி விட காங்கிரஸ் எம்.பி.க்களை சந்திக்க சோனியா அழைப்பு விடுத்துள்ளார். இன்று தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சந்திப்பு நடைபெறும். இன்று (திங்கள்) ஆந்திரா, அசாம், பீகார், மணிப்பூர், மேகாலயா, அரு ணாச்சல பிரதேச எம்.பி.க் களுடன் சோனியா ஆலோ சனை நடத்துகிறார்.
 
நாளை (செவ்வாய்கிழமை) காஷ்மீர், இமாச்சல பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அரி யானா, பஞ்சாப், சண்டிகர், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் எம்.பி.க்களிடம் சோனியா பேசுகிறார். புதன்கிழமை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கோவா, தாதர் ஹவேலி, டாமன்-டைï, மேற்கு வங்காளம், அந்தமான் தீவு எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலை முன் கூட்டியே நடத்துவது குறித்து எம்.பி.க் களிடம் அவர் கருத்து கேட்பார்.
 
எம்.பி.க்களிடம் ஆலோ சனை நடத்தும் போது, நகரங் கள் முதல் கிராமங்கள் வரை காங்கிரஸ் அமைப்புகள் உள்ள எல்லா பகுதிகளிலும் சிறப்பான பட்ஜெட்டை வழங் கியதற்காக நன்றி தெரிவிக் கும் கூட்டங்களை நடத்துமாறு சோனியா அறிவுறுத்த உள் ளார். ரெயில்வே பட் ஜெட்மற்றும் பொது பட்ஜெட் மூலம் பெண்கள், விவசாயி களுக்கு கிடைத்துள்ள நன்மை களை விளக்கி எடுத்துச் சொல்லுமாறு சோனியா கேட்டுக் கொள்வார்.
 
பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டங்கள் மூலம் நாடெங்கும் காங்கிரசுக்கு ஆதரவான ஒரு அலையை ஏற்படுத்த முடியும் என்று சோனியா எதிர்பார்க்கிறார்.
 
எனவே அடுத்து வரும் மாதங்களில் காங்கிரஸ் மேலும் சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 Other Articles
•  10 May 2008 17:11:00 அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய்
•  10 May 2008 16:55:00 ஊட்டியில் ரோஜhக் கண்காட்சி
•  10 May 2008 16:47:00 புலிகளுக்கு பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
•  10 May 2008 16:37:00 வட கொரியாவிடம் அணு ரகசியத்தை வெளியிட்ட பெனாசிர்
•  10 May 2008 16:24:00 2007-ம் ஆண்டின் "செஸ் ஆஸ்கர்" விருது
•  10 May 2008 16:03:00 கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசம் - ஐ.சி.சி குற்றச்சாட்டு
•  10 May 2008 15:54:00 கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பாயிஸ் இல்லம்
•  10 May 2008 15:36:00 மியான்மாருக்கான ஐ.நா நிவாரண உதவிகள் நிறுத்தம்
•  10 May 2008 15:19:00 மோசடிகளுக்கு மத்தியிலும் 60 சதவிகித வாக்குகள் பதிவாகின
•  10 May 2008 15:11:00 தேர்தல் முடிவடைந்தது - முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்
•  10 May 2008 15:03:00 புலிகளின் பகுதியில் விமானத் தாக்குதல்
•  10 May 2008 14:48:00 "நீதியை நிலை நாட்டத் தவறிய பிரித்தானியா" - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்ட
•  10 May 2008 13:28:00 ஆணையாளரின் உத்தரவுகள் கிழக்கில் அமுல்படுத்தப்படவில்லை
•  10 May 2008 13:22:00 முஸ்லிம் வாக்களார்கள் மிரட்டப்பட்டுள்ளனர்
•  10 May 2008 13:20:00 அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலின் விளிம்பில்
•  10 May 2008 13:13:00 வன்முறைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்
•  10 May 2008 13:09:00 கண்டாவளை பிரதேச செயலக கரப்பந்து, வலைப்பந்து போட்டி
•  10 May 2008 13:07:00 “அதிபர், ஆசிரியர்களுக்கு வழிகாட்டி” நேற்று நூல் வெளியிட்டுவைப்பு
•  10 May 2008 12:59:00 அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் அல்லைப்பிட்டி மக்கள்
•  10 May 2008 10:35:00 மரணம் துரத்தும் குழந்தைகள்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions