News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

சிதம்பரம் கோவில் பிரச்சினை: கைதான அனைவரும் விடுதலை; கருணாநிதி உத்தரவு

06-03-2008
Article by:
Pradeep

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் கைதான அனைவரையும் விடுதலை செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் திருமுறைகளை ஓதி வழிபடும் பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்துறை செயலாளர், அறநிலையத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோரை அழைத்து கலந்து ஆலோசித்தார்.
 
தற்போது, நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத சூழ்நிலையில், இரு தரப்பினர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையிலே உள்ளவர்களை-சிறையிலிருந்து விடுவிக்குமாறு முதல்-அமைச்சர் கூறிய அறிவுரையின்பேரில், உடனடியாக அதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட 44 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவு நகல் சிதம்பரம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு வசந்தி கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறை சூப்பிரண்டு முருகேசனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
 
இதை தொடர்ந்து ஓதுவார் ஆறுமுகசாமி உள்பட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். ஓதுவார் ஆறுமுகசாமியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கடலூர் மத்திய சிறை முன் கூடினர்.
 
பின்னர் ஓதுவார் ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக அரசின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழில் தேவாரம் பாட மீண்டும் இன்று (வியாழக்கிழமை) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்கிறேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேவாரம், திருவாசகத்தை இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் பாட வேண்டும். தமிழ் மொழி வளர வேண்டும்.
 
இவ்வாறு ஓதுவார் ஆறுமுகசாமி கூறினார்.

 Other Articles
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:44:00 காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
•  20 May 2008 10:42:00 கணக்கு முடிப்பாரா செல்வா?
•  20 May 2008 10:40:00 பொய் ஆகாஷா? ஜெய் ஆகாஷா?!
•  20 May 2008 10:18:00 சாராய பலி 120-ஐ எட்டியது
•  20 May 2008 10:15:00 அமைச்சர் பூங்கோதை ராஜினாமா ஏற்பு
•  20 May 2008 10:13:00 சானியா விலகல்
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 10:02:00 இலங்கையின் இரண்டு நிறுவனங்கள் எயிட்ஸ் ஒழிப்பு நிதியை பெறுகின்றன
•  20 May 2008 10:00:00 மகாதிர் முகமது விலகல்
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions