மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து விழுப்புரத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் வைகோ கலந்து கொண்டார்.
.
மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு, கரும்புக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யாத அவலம், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, முல்லை பெரியாறு, பாலாறு, காவேரி பிரச்சனைகளில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதிமுக சார்பில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் தலைமை அலுவலகம் எதிரில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.
அதிமுக விவசாய அணி செயலாளர் துரைகோவிந்தராஜ் உண்ணாவிரதத்தை இன்று மாலை முடித்து வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.