திரிபுரா மாநிலத்தி இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.அக்கூட்டணி 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது.வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே இடதுசாரி முன்னிலையில் இருந்து வருகிறது.
முற்பகல் 11.30 நிலவரப்படி இடதுசாரி 44 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 2 இடங்களுக்கான நிலவரம் தெரியவரவில்லை.அதே சமயம் பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
மதியத்திற்குள் முழு நிலவரமும் தெரிய வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.