News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

நடுக்கடலில் பயங்கர மோதல்

09-03-2008
Article by:
Pradeep

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கும் நேரம் தொடர்பாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கும், திருச்செந்தூர் பகுதி நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்தூத்துக் குடியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இருவர் நாட்டு படகு மீனவர்களால் தாக்கப் பட்டனர்.
 
இதையடுத்து தூத்துக் குடி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண தூத்துக்குடி கோட்டாட்சியர் கலைமணி தலைமையில்சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது.
 
இதில் விசைப்படகு மீனவர்கள் அதிகாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே கடலில் மீன் பிடிக்க வேண்டும். மேலும் 3 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் சென்றுதான் மீன் பிடிக்க வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.
 
இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
 
தூத்துக்குடி புதுத்தெரு கென்னடிக்கு சொந்தமான விசைப்படகில் குரூஸ்புரம் அந்தோணிசாமி (வயது 55), சேகர், புதுதெரு ஜார்ஜ், பூபாலராயர்புரம் பிலிப், ஸ்டீபன், லூர்தம்மாள்புரம் பின்டோ, அலெக்சாண்டர் ஆகிய 7 பேரும் சனிக்கிழமை காலை 6 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
 
இவர்கள் பகல் 11 மணி யளவில் மணப்பாடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது இவர்களது விசைப்படகை 10க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் சுற்றி வளைத்தன. அதில் இருந்த மீனவர்கள் தூத்துக்குடி மீனவர்கள் மீது கற்கள், கம்பு மற்றும் கம்பிகளால் தாக்கினர்.
 
இதில் பலத்த காயமடைந்த அந்தோணிசாமி சம்பவ இடத்திலேயே இறந் தார். மேலும் 3 பேர்படுகாய மடைந்தனர்.
 
இது குறித்து அந்த விசைப் படகில் இருந்தவர்கள் வயர்லெஸ்மூலம் கரைக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு மீனவர்கள் அனைவரும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் குவிந் தனர்.
 
அந்த சமயத்தில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற விசைப்படகுகளும் தகவல் அறிந்ததும் அவசர அவசரமாக கரைக்கு திரும்பின.
 
இதனால் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் பதட்ட மான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில்மாலை 6 மணி அளவில் இறந்த மீனவர் சடலத்துடன் விசைப்படகு மீன் பிடி துறைமுகத்தை வந்தடைந்தது.
 
இதை தொடர்ந்து பதட்டம் மேலும் அதிகரிக்கவே தூத்துக்குடி கோட்டாட்சியர் கலைமணி, வட்டாட்சியர் வேலுசாமி, மீன்வளத்துறை இணை இயக்குனர் சுப்புராஜ், டி.எஸ்.பி. கோரி, தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி ஆகியோர் அங்கு வந்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
எனினும் சம்பந்தப்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில்ஈடுபட்டனர்.இறந்த மீனவர் பிணத்துடன் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
 
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக் காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மீனவர்கள் தொடர்ந்து கடற்கரை கரையில் அமர்ந்து மறியல் செய்தனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
 
இதற்கிடையே மீனவர் களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்து வதற்காக கலெக்டர் பழனியாண்டி கோட்டாட்சியர் அலுவல கத்துக்கு வந்தார். இதில் விசைப் படகு மீனவர் சங்கத்தினர் அல்போன்ஸ், செயலாளர் சேவியர்வாஸ், தொழிலாளர் சங்க தலைவர் தர்மபிச்சை, போலீஸ் சூப்பிரண்டு தீபக் டாமோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதில் விசைப்படகு மீனவர் கள்ë மீது தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அமைதி குழு கூட்டம் நாளை நடத்தப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மீனவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
 
இந்த தாக்குதல் சம்ப வம் தொடர்பாக குலசேகர பட்டினம் போலீசார் மணப்பாடு ஊர் கமிட்டி துணைத்தலைவர் டொமினிக் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மணப்பாடு மீனவர் காலனி பிவிண்டன், குமார் ஆகியோரை திருச் செந்தூர் டி.எஸ்.பி.சாமிதுரை வேலு, இன்ஸ் பெக்டர்கள் ஆறுசாமி, லயோலா இக்னே ஷியஸ் இன்று காலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகி றார்கள்.
 
தாக்குதலில் பலியான மீனவர் அந்தோணிசாமியின் உடல் நேற்று இரவே பிரேதபரி சோதனை செய்யப்பட்டது.இன்று காலை அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.தூத்துக்குடிநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 Other Articles
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:44:00 காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
•  20 May 2008 10:42:00 கணக்கு முடிப்பாரா செல்வா?
•  20 May 2008 10:40:00 பொய் ஆகாஷா? ஜெய் ஆகாஷா?!
•  20 May 2008 10:18:00 சாராய பலி 120-ஐ எட்டியது
•  20 May 2008 10:15:00 அமைச்சர் பூங்கோதை ராஜினாமா ஏற்பு
•  20 May 2008 10:13:00 சானியா விலகல்
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 10:02:00 இலங்கையின் இரண்டு நிறுவனங்கள் எயிட்ஸ் ஒழிப்பு நிதியை பெறுகின்றன
•  20 May 2008 10:00:00 மகாதிர் முகமது விலகல்
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions