டெல்லி மேல்சபையில் 6 தமிழக எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் மாதம் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து டெல்லி மேல்சபைக்கு புதிய உறுப்பி னர்களை தேர்ந்து எடுக்க வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் 5 வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். தி.மு.க.-2, காங்கிரஸ்-2, இந்திய கம்ïனிஸ்டுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
கழகத் தலைவர் கலைஞர் 8.3.08 அன்று மாநிலங்களவை தேர்தல் குறித்து வெளியிட் டுள்ள அறிக்கையினை யொட்டி மார்ச் 26-ந்தேதி நடைபெறவிருக்கும் மாநிலங் களவை தேர்தலுக்கான தி.மு.க. வின் 2 வேட்பாளர்களாக 1. வக்கீல் அ.அ. ஜின்னா பி.ஏ.பி.எல்., 2. வசந்தி ஸ்டான்லி எம்.ஏ.பி.எட்.,பி.எல்., ஆகியோர் அறிவிக்கப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தி ஸ்டான்லி 1962-ம் ஆண்டு பிறந்தார். சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எம்.ஏ. (ஆங்கிலம்) பி.எட்.பி.எல். படித் தவர். தற்போது கீழ்ப்பாக்கம் தோட்டம் காலனியில் அரசினர் குடியிருப்பில் வசித்து வரு கிறார்.
தி.மு.க. தலைமை கழக பேச்சாளராகவும், தென் சென்னை மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவராகவும், மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாள ராகவும், தென் சென்னை மாவட்ட
துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.
டெலிபோன் ஆலோசனை குழு தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழு, மாநில சிறு பான்மை ஆணையம் ஆகிய வற்றில் உறுப்பினராக பணி யாற்றியுள்ளார்.
தமிழ்நாடு வணிக வரித்துறையில் உதவி வணிக வரி அலுவலராக 20 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்துள் ளார். தற்போது டெல்லி சிறு பான்மையினர் கல்வி நிலையங்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். (இது மத்திய அரசு செயலாளர் பதவிக்கு இணையானது) தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியும்.
வசந்தியின் கணவர் ஸ்டான்லி நெல்லை பாளையங் கோட்டையைச் சேர்ந்தவர். சென்னை மேற்கு மாம்பலத் தில் மருந்து கம்பெனி நடத்தி வருகிறார்.
மற்றொரு வேட்பாளரான ஜின்னாவின் முழுப்பெயர் அமீர் அலி ஜின்னா. திருவா ரூரில் 1941-ல் பிறந் தார். லயோலா கல்லூரியில் பி.ஏ. படித்து சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார்.
48 வருடமாக தி.மு.க.வில் இருக்கிறார். தி.மு.க. தலைமை கழக வழக்கறிஞராவும், நிர்வாக குழு, பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினரா கவும் இருந்து வருகிறார். `மிசா' சட்டத்தில் கைதாகி ஒரு வருடம் சிறையில் இருந்தார்.
தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழு உறுப்பினரா கவும், துறைமுக பொறுப்பு கழக உறுப்பினராகவும் பதவி வகிததுள்ளார்.
தற்போது சென்னை அண்ணாநகரில் வசிக்கிறார். இவரது மனைவி பெயர் சுபைதா ஜின்னா. இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
மேல்சபை தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று தொடங்கி யது. 15-ந்தேதி வரை மனுக்கள் பெறப்படும். 17-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. மனு வாபஸ் பெற 19-ந்தேதி கடைசிநாள்.
தேர்தலில் போட்டி இருந்தால் 26-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.