News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

மின்சார தட்டுப்பாடு: தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிப்பதா?

10-03-2008
Article by:
Pradeep

தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
 
எனது ஆட்சிக் காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை என்பது எள்ளளவும் கிடையாது. தமிழ்நாடு மின்சார உற்பத்தி
யில் மிகை மாநிலமாக இருந் தது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற் போதைய நிலைமை என்ன
என்று கேட்டால், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக வும், அதற்காக குடியரசுத் தலைவர் விருதை தமிழ் நாடு மின்சார வாரியம் பெற்று இருப்பதாகவும் கூறுகிறார் ஆற்காடு வீராசாமி.
 
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப் பதைப் போல, எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளுக்காகக் கிடைத்த விருதை, தான் செய்த சாதனை போல் சித்தரிக்கும் கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமியின் செயல் வன்மையாகக்கண் டிக்கத்தக்கது. காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முன் னணியில் இருந்தால், மின் தடை, மின் வெட்டு ஆகியவை ஏன் ஏற்படுகின்றன அண்டை மாநிலங்களில் இருந்து ஏன் மின்சாரத்தை வாங்கு கிறார்கள் மின்சார விடு முறை அறிவிப்பு ஏன் தமிழ் நாடு மின்சார வாரியத்தால் வெளியிடப்படுகிறது
 
தற்போது அனைத்து உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்தத் தொழிற்சாலைகளுக்கு ஒவ் வொரு வாரமும் புதன்கிழமை மின்சார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் வாரிய இணைப்பில் இருந்து மின்சாரத்தைப்பயன் படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
 
இது மட்டும் அல்லாமல், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் வாரியத்தின் மின் விநியோகத்தைப்பயன்படுத் தாமல், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்து மாறு அனைத்துத் தொழிற் சாலைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வெகு விரைவில் வீட்டு உபயோ கிப்பாளர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட
வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
 
இது மட்டும் அல்லாமல், மத்திய அரசின் 2003-ஆம் ஆண்டு மின் சட்டத்தின்படி, உற்பத்தி பிரிவில் இருந்து விநியோக பிரிவுக்கு மின் சாரத்தை எடுத்து செல்லும் பிரிவை, தனி நிறுவன மாகப் பிரித்து அதற்கு ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரே ஷன் என்று பெயர் வைக்கப் போவதாகவும், இதன் மூலம் மின்சார வாரியம் தனியார் வசம் செல்லும் அபாயம் உள்ளதாகவும், மின்சார வாரியத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மேற்படி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள் என்றும், தற் போது ஊழியர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து கிடைப்பது சந்தேகம் என்றும் தகவல்கள் வருகின்றன.
 
1996-2001-ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதே, இது போன்ற ஒரு வாரியத்தை அமைக்க ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். அதை இப்போது நிறைவேற்ற முயற்சி செய்கிறார் போலும்! எனது ஆட்சிக் காலத்தில், தொழிலாளர் நலன் கருதி மேற்படி திட்டத்தை நான் நடைமுறைப்படுத்தவில்லை. தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் தி.மு.க. அரசின் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த முயற் சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
இத்தகைய திறனற்ற செயல் பாடுகளால், மின்துறைமட்டு மல்ல, அனைத்துத்துறைகளும் வெகு சீக்கிரம் பாதிக்கப்பட கூடிய நிலைமை உருவாகி வருகின்றது. தொழிற்சாலை களுக்கெல் லாம் `ஜெனரேட்டர்' உப யோகித்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்தால், தமிழ் நாட்டில் தொழில் தொடங்க எவரும் முன்வர மாட்டார் கள். இருக்கின்ற தொழிற் சாலைகளும், மின்சாரம் மிகை யாக உள்ள மாநிலங்களுக்குச் சென்று விடும்.
 
மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ `வடமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கப் போகி றோம், வட கிழக்கு மாநிலங்களில் இருந்து மின் சாரத்தை வாங்கப் போகிறோம், எனவே மின்சாரப் பற்றாக் குறை ஏற் படாது', என்று பத்திரிகை களுக்குப் பேட்டி அளிக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியம் சொல்வது உண்மையாப அல் லது ஆற்காடு வீராசாமி சொல்வது உண்மையாப தமிழ் நாடு மின்சார வாரியத்தில் என்ன நடைபெறுகிறது என் பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்கக் கடமைப் பட்டிருக்கிறார்.
 
தொழிற்சாலைகளுக்கு மின் சார விடுமுறை அறிவித்த தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழி போடுவது ஆகியவற்றில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, மின் உற்பத்தியைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி கவனம் செலுத்தி, மின்சார விடுமுறை அறி விப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
 
தமிழ்நாடு மின்சார வாரி யத்தைத் தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியை உடன டியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், மக்களைத் திரட்டி அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 Other Articles
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 06:18:00 ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்
•  13 May 2008 06:17:00 சீனாவில் 1976 முதல் இதுவரை நடந்த பயங்கர பூகம்பங்கள்
•  13 May 2008 02:20:00 விரைவில் பில்லா பார்ட் டூ?
•  13 May 2008 01:53:00 கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2008
•  13 May 2008 01:50:00 தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும்
•  13 May 2008 01:32:00 உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
•  13 May 2008 01:30:00 பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் விரிசல்
•  13 May 2008 01:27:00 ஆசிய மகளிர் கிரிக்கட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன்
•  13 May 2008 01:16:00 தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் (மேலதிக தகவல்)
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 17:18:00 ஹிலாரி துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பளிப்பேன் - ஒபாமா
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions