News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

அரசு அறிவித்ததை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை

10-03-2008
Article by:
Pradeep

பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த் தியது.
 
இதையடுத்து சமன் படுத்தப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் படி லிட்டர் ரூ.13.75 என்று இருந்த சமன் படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.15.75 ஆகி இருக்கிறது.
 
இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.2 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னைன கடை களில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
 
அரை லிட்டர் பாக்கெட்டு களுக்கே விலை ரூ.2 அதிகமாக விற்கப்பட்டது. வெளி மாவட் டங்களிலும் ஆவின் பால் விலை இடத்துக்கு ஏற்ப அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
 
மதுரையில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.8 உயர்ந்து ரூ.23 ஆகி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலும் ஆவின் பால் ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.6 அதிகமாகி விட்டது.
 
இது போல பல்வேறு பகுதி களிலும் ஆவின் பால் அரசு உயர்த்தியதை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தபடி உள்ளன.
 
இது குறித்து பால் வளத்துறை அமைச்சர் மதிவாணனிடம் "மாலைமலர்'' நிருபர் கேட்ட போது அவர் கூறியதாவது:-
 
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் நலன் கருதி, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக விற்பனை விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே லாப நோக்கம் இல்லாமல் சமன் படுத்தப்பட்ட பால் விலை லிட்டருக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது.
 
ஆவின் பால் என்ன விலைக்குவிற்கப்பட வேண் டும் என்பது குறித்து, விற்பனையாளர்களுக்கு முன்னதாகவே விலை விப ரம் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு சிலர் விற்பதாக புகார்கள் வருகின்றன.
 
ஆவின் பால் நிர்ணயிக்கப் பட்ட விலைக்குத்தான் விற்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
கூடுதல் விலைக்கு விற்பது ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பால் விற்பனை யாளர்களுக்கு, ஆவின் பால் விற்பனை செய்யும் அனுமதி ரத்து செய்யப்படும். மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப் படும்.
 
ஆவின் பால் விற்பனை செய்யும் இடங்களில் பால் பாக்கெட் விலை பட்டியல் தொங்க விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில்லரை யாக ஆவின் பால் விற்பனை செய்யும் கடைகளிலும் பால் விலை பட்டியலை கண்டிப்பாக தொங்க விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் அது குறித்து பொது மக்கள் புகார் செய்யலாம். ஆவின் நிறுவனம், அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். மற்றும் சேவை மையத்துடன் 18004253300 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டும் புகார் செய்யலாம்.
 
எனது தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு என்னிடம் ஆதாரத்துடன் புகார் செய்யலாம். எனது செல் நம்பர் 9442476222.
 
இவ்வாறு அமைச்சர் மதிவாணன் கூறினார்.
 

அரசு நிர்ணயித்த பால் விலை
 
ஆவின் நிறுவனம் அறிவித்த படி சமன்படுத்தப்பட்ட (டோண்டு) பால் அட்டை மூலம் ரூ.15.75க்கும் அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.18க்கும் விற்கப்பட வேண்டும். இது போல ரூ.7.90க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் பால் ரூ.9 ஆகி உள்ளது.
 
ரூ.9.50க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் பால் ரூ.11-க்கும், அரை லிட்டர் புல் கிரீம் பால் ரூ.10.50ல் இருந்து ரூ.11-ம், டபுள் டோண்டு பால் அரை லிட்டர் ரூ.7.75ல் இருந்து ரூ.9 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டைஸ்டு பால் அரை லிட்டர் ரூ.9.25ல் இருந்து ரூ.10 ஆகவும், இதே ரக ஒரு லிட்டர் பால் ரூ.18.50ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

 Other Articles
•  13 May 2008 09:57:00 "ராஜினாமா" பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள்
•  13 May 2008 09:47:00 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது
•  13 May 2008 09:43:00 கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : சோனியா இன்று பிரச்சாரம்
•  13 May 2008 09:41:00 'பாண்டி'யில் லாரன்சுடன் சினேகா போடும் 'கிக்' ஆட்டம்
•  13 May 2008 09:37:00 மல்லிகாவை 'காத்த' ரஜினி
•  13 May 2008 09:34:00 டிராவிட்டை நம்பியது தவறுமல்லையா மல்லையா
•  13 May 2008 09:30:00 விஜயகாந்த் தொண்டர்களால் இடைஞ்சலா?
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 06:18:00 ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்
•  13 May 2008 06:17:00 சீனாவில் 1976 முதல் இதுவரை நடந்த பயங்கர பூகம்பங்கள்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions