காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் உள்பட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
அத்துடன், கர்நாடகத்தில் தடுப்பணைகள் கட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு, தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் கர்நாடகம் பதில்-மனு தாக்கல் செய்திருக்கிறது.