News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை

14-03-2008
Article by:
Pradeep

மதிமுக மாநிலங்களைவத் தேர்தல்களில் போட்டியிடாது என அறிவித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அதன் கூட்டணிக் கட்சியான அஇஅதிமுகவின் சார்பாக முன்னாள் குடிசைமாற்று வாரியத் தலைவர் ந.பாலகங்கா வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
தேர்தல்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக இன்னொரு இடத்திற்காக போட்டியிடும் எனவும் அறிவித்திருந்தார்.
 
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கட்சி நிர்வாகிகள் நீண்ட நேரம் தேர்தல்கள் பற்றி விவாதித்த பிறகு வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
தற்போது அஇஅதிமுக - மதிமுக கூட்டணிக்குள்ள சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில், ஓர் இடத்தில் அது உறுதியாக வெற்றிபெற்றுவிடலாம்.
 
அந்த உறுதியான இடம் அதிமுகவின் பாலகங்கா என்ற நிலையில், நடிகர் விஜயகாந்த, மற்றும் தளி சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரின் ஆதரவு இருந்தால்தான் அக்கூட்டணி இன்னொரு இடத்தில் வெல்லமுடியும்.
 
அப்படி கிடைக்குமா என்று உறுதியாகத் தெரியாதபோது, போட்டிபோட்டு தோற்க கட்சி விரும்பவில்லை என்பதாலேயே போட்டியிலிருந்து விலக மதிமுக முடிவெடுத்ததாக நம்பப்படுகிறது.
 
ஆனால் இந்த முடிவு ஜெயலலிதாவிற்கு அதிருப்தியை அளிக்கும், அது எந்த விதத்தில் கூட்டணியை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றும் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 
பாட்டாளி மக்கள் கட்சியும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவிருக்கிறதா என்பது குறித்து இன்னமும் தெரிவிக்கவில்லை.
 
இதனிடையே காங்கிரஸ் சார்பாக மத்திய இணை அமைச்சர் ஜீ.கே.வாசன் போட்டியிடுவார் என்று புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது
 
 

 Other Articles
•  17 May 2008 01:33:00 கேரள நடிகர்களை மிரள வைத்த விஜய்
•  17 May 2008 01:32:00 அரசாங்கம்
•  17 May 2008 01:26:00 தீவிரவாதிகள் திடுக்கிடும் தகவல் : ராமகோபாலனை கொல்ல சதி
•  17 May 2008 01:21:00 ஜெயசூர்யா விளாசல்: மும்பை சூப்பர் வெற்றி
•  17 May 2008 01:17:00 பர்மா சூறாவளில் 78,000 பேர் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:15:00 கொல்கத்தா நீதிமன்றத்தின் தடை உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது
•  17 May 2008 01:10:00 அனுபவிக்க வேண்டிய வளமா? பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமா?
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:54:00 சாதனையாளர் சந்திரசேகரன் சாலினியைப் பாராட்டிக் கொளரவிப்பு
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:54:00 கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு
•  16 May 2008 15:37:00 மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை அதிகரிக்கும்.
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:36:00 டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி
•  16 May 2008 14:30:00 ஆர்டிக் கடலில் புதைந்து கிடக்கும் ரகசிய புதையல்
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions