News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தேர்ந்து எடுக்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முடிகிறது

15-03-2008
Article by:
Pradeep

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்காக, வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு, இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
 
மார்க்சிஸ்ட் மனு தாக்கல்
 
தி.மு.க. கூட்டணி சார்பில் 5 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில், தி.மு.க. வேட்பாளர்கள் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.கே.ரெங்கராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
காங்கிரஸ் வேட்பாளர்கள்
 
காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரியும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
அவர்கள், இன்று (சனிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.
 
அ.தி.மு.க. கூட்டணி
 
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 2 பேர் போட்டியிடுவார்கள் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாலகங்கா ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். மற்றொரு இடம் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
 
ஆனால், திடீர் திருப்பமாக, இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று ம.தி.மு.க. அறிவித்து விட்டது.
 
பா.ம.க. ஆதரவு
 
தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வற்புறுத்தி வந்தார். ஆனால், இறுதியில் பா.ம.க. தனது நிலையை மாற்றிக்கொண்டு, தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தது.
 
பா.ம.க மற்றும் ம.தி.மு.க. மேற்கொண்ட நிலை காரணமாக டெல்லி மேல்-சபை தேர்தலில் நிலவிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. என்றாலும், தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட முன்வராததால் அ.தி.மு.க. சார்பில் 2-வது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதுபற்றி இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
 
போட்டியின்றி தேர்வு?
 
அ.தி.மு.க. சார்பில் 2-வது வேட்பாளர் நிறுத்தப்படாவிட்டால், 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் இறுதியாக 6 பேர் மட்டுமே போட்டியிடுவார்கள்.
 
எனவே, வருகிற 26-ந் தேதி அன்று தேர்தலுக்கு அவசியம் இருக்காது என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாளான 19-ந் தேதி அன்று, 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 Other Articles
•  05 Jul 2008 09:52:00 கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:25:00 கச்சதீவை மீளப்பெற வேண்டும் எனகோரிக்கை
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 02:05:00 இந்து மாமன்றம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு நினைவு அஞ்சலிக் கூட்டம்
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
•  05 Jul 2008 01:51:00 அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் எப்படி ஊடகங்களுக்கு கிடைக்கின்றன?
•  05 Jul 2008 01:50:00 அமெரிக்காவின் இறுதிக் கோரிக்கை போலந்துப் பிரதமரால் நிராகரிப்பு
•  05 Jul 2008 01:48:00 வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை கடத்தல்
•  05 Jul 2008 01:43:00 எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions