News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

அத்வானியை கொல்ல சதி

16-03-2008
5 / 5 (1 Votes)
Article by:
Pradeep

பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை கொல்ல தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்ட பின்னர், அவருக்கு கொலை மிரட்டல் வருவது அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கும் அடிக்கடி தகவல் கிடைத்து வருகிறது.
 
சமீபத்தில், இதுகுறித்து புலனாய்வுத்துறை மத்திய அரசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அத்வானியின் ரத யாத்திரை திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் குறைக்கப்பட்டது. அவரது பாதுகாப்பும் பலப்படுத்தபட்டது.
 
இந்நிலையில் ௦௦௦௦௦௦௦௦௦வடமாநிலங்களில் அடுத்தவாரம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அத்வானியின் உயிருக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பத்திரிகை நிருபர், கட்சி தொண்டர் அல்லது மனு கொடுப்பவர் போன்று வேடமணிந்து வந்து அத்வானியை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து அத்வானியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே, ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லி பழைய ரயில் நிலையம் மற்றும் உத்திரபிரதேசம் ஹபூர் ரயில் நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப்போவதாகவும் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 Other Articles
•  10 May 2008 17:11:00 அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய்
•  10 May 2008 16:55:00 ஊட்டியில் ரோஜhக் கண்காட்சி
•  10 May 2008 16:47:00 புலிகளுக்கு பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
•  10 May 2008 16:37:00 வட கொரியாவிடம் அணு ரகசியத்தை வெளியிட்ட பெனாசிர்
•  10 May 2008 16:24:00 2007-ம் ஆண்டின் "செஸ் ஆஸ்கர்" விருது
•  10 May 2008 16:03:00 கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசம் - ஐ.சி.சி குற்றச்சாட்டு
•  10 May 2008 15:54:00 கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பாயிஸ் இல்லம்
•  10 May 2008 15:36:00 மியான்மாருக்கான ஐ.நா நிவாரண உதவிகள் நிறுத்தம்
•  10 May 2008 15:19:00 மோசடிகளுக்கு மத்தியிலும் 60 சதவிகித வாக்குகள் பதிவாகின
•  10 May 2008 15:11:00 தேர்தல் முடிவடைந்தது - முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்
•  10 May 2008 15:03:00 புலிகளின் பகுதியில் விமானத் தாக்குதல்
•  10 May 2008 14:48:00 "நீதியை நிலை நாட்டத் தவறிய பிரித்தானியா" - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்ட
•  10 May 2008 13:28:00 ஆணையாளரின் உத்தரவுகள் கிழக்கில் அமுல்படுத்தப்படவில்லை
•  10 May 2008 13:22:00 முஸ்லிம் வாக்களார்கள் மிரட்டப்பட்டுள்ளனர்
•  10 May 2008 13:20:00 அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலின் விளிம்பில்
•  10 May 2008 13:13:00 வன்முறைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்
•  10 May 2008 13:09:00 கண்டாவளை பிரதேச செயலக கரப்பந்து, வலைப்பந்து போட்டி
•  10 May 2008 13:07:00 “அதிபர், ஆசிரியர்களுக்கு வழிகாட்டி” நேற்று நூல் வெளியிட்டுவைப்பு
•  10 May 2008 12:59:00 அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் அல்லைப்பிட்டி மக்கள்
•  10 May 2008 10:35:00 மரணம் துரத்தும் குழந்தைகள்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions