News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தி.மு.க.வுக்கு விஜயகாந்த் சவால்

16-03-2008
Article by:
Pradeep

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு
கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வள்ளல் பத்மநாபன், மணலி சுப் பையா ஆகியோர் தலைமையில் விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசியதாவது:-
 
தே.மு.தி.க.வில் நாள் தோறும் ஏராளமானோர் இணைந்து வருகிறார்கள். இது மக்கள் என் மீது வைத்துள்ள நம்பகத்தன்மையை காட்டு கிறது. என்னை கெட்ட வன் என்று சித்தரிப்பதற்காக என் மீது வழக்கு போட்டு கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். வருமானவரி அதிகாரிகளை ஏவி விட்டார்கள். மண்டபத்தை இடித்தார்கள்.
 
தற்போது மதுராந்தகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித் ததாக குற்றம் சாட்டுகிறார்கள். மக்கள் பணத்தில் நிலத்தை வளைத்து போடவில்லை. உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்து மதுராந்தகத்தில் ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கி முறைப்படி பத்திர பதிவும் செய்து இருக் கிறேன். அதில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு இருந்து இருந்தால் அப்போதே எடுத்து இருக்கலாம் இப்பாதுதான் அதை குற்றச்சாட்டாக கூறி உள்ளார்கள். நானும் அதில் உள்ள அரசு நிலத்தை எடுத்து கொள்ள சொல்லி விட்டேன்.
 
நான் நல்லவனாப கெட்டவனாப என மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் போரூர் ஏரியை வளைத்து போட வில்லலை. எப்போதும் நான் நல்லவன்தான். எதற்கும் பயப்பட போவதில்லை. எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் எனது தைரியத்தை விலைக்கு வாங்க முடியாது.
 
நான் தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி வைத் துள்ளேன். அதனால்தான் மக்கள் என்னை நம்புகின்றனர் அதற்கு எடுத்து காட்டுதான் திருச்சி மகளிர் பேரணி 4 கிலோ மீட்டர் தூரம் லட்சக் கணக்காண பெண்கள் பேரணியாக வந்ததை யார் தான் மறுக்க முடியும்.
 
அவர்கள் (தி.முக.). மகளிர் மாநாடு நடத்தப் போவதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு சவால்விடுகிறேன். அரசு அதிகாரிகளையும், அரசு பஸ்களையும் பயன்படுத்தி சொந்த காசு செலவழித்து பெண்களை திரட்டாமல் அவர்களாகவே விரும்பி வரும் பெண்களை தே.மு.தி.க. பேரணி போல் திரட்ட முடியுமாப
 
திட்டங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவசமாக டி.வி. என்கிறார் கள். அதை விற்றால் கைது செய்கிறார்கள். அவர் களுக்கு வசதி இருந்தால் விற்பார்களா?
 
பால் விலையை உயர்த்தி இருக்கிறீர்கள். அதை கேட்டால் பொறுத்துக் கொள்ளும் மனம் இல்லை. ஏன் உயர்த்தினீர்கள் என்றால் சென்ற ஆட்சியிலும் உயர்த்தினார்கள். எனவே நாங்களும் உயர்த்துகிறோம் என்கிறார்கள்.
 
ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இல்லை. பஸ்களில் கட்டணம் மறை முகமாக உயர்த்தப் பட்டுள் ளது. சென்னை-கடலூ ருக்கு ரூ. 10-ம், சென்னை- சிதம்பரத்துக்கு ரூ. 20ம், புதுவைக்கு ரூ. 11ம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு என்ன பதில் சொல்வார்கள்ப மக்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும்.
 
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
 
தலைமை நிலைய செய லாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், வி.என்.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 Other Articles
•  11 May 2008 18:04:00 எலக்ட்ரானிக் குப்பையில் இருந்து தங்கம்..
•  11 May 2008 17:17:00 ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம்
•  11 May 2008 16:37:00 தாய்ப்பாலால் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் அதிகரிக்கிறது
•  11 May 2008 16:16:00 நக்சல்களை அடக்க சிறப்பு அதிரடிப்படை-உள்துறை அமைச்சகம்
•  11 May 2008 16:01:00 ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள்
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 13:02:00 ரோஜர் பெடரருக்கு மற்றொரு தோல்வி
•  11 May 2008 10:41:00 ஸ்பைடரை மிஞ்சும் 'அயர்ன் மேன்'
•  11 May 2008 10:38:00 ஜூலை 18ல் குசேலன்
•  11 May 2008 10:37:00 மியான்மர் மனமாற்றம்
•  11 May 2008 10:32:00 தைவானில் கடும் பூகம்பம்
•  11 May 2008 10:28:00 மத்திய அரசை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions