News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை தடுக்க இந்தியா முயற்சி

17-03-2008
Article by:
Pradeep

பாகிஸ்தான் சிறையில் உள்ள உள்ள இந்திய கைதி சரப்ஜித் சிங்குக்கு வரும் ஏப்ரல் 1 ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் , அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது.
 
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 14 பேர் பலியாகினர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று உளவு பார்த்ததாக கூறி சரப்ஜித் சிங் என்ற இந்தியரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சரப்ஜித் சிங் மறுத்தார்.
 
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் அரசு கடந்த 17 வருடங்களாக சரப்ஜித் சிங்கை லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளது.
 
இதுதொடர்பாக லாகூர் நீதிமன்றம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதையடுத்து, கடந்த 2006ல் சரப்ஜித் சிங் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
 
இதைதொடர்ந்து, அதிபர் முஷாரப்புக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், முஷாரப்பும் கருணை மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
 
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளாது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
 
இந்நிலையில்,சரப்ஜித் சிங்கை காப்பாற்றும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சரப்ஜித் சிங் குடும்பத்தினர் கோரிக்கை மனு அனுப்பினர்.இதனைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை தடுத்தும் நிறுத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் , தற்போதைய சூழ்நிலையில் சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவது சரியான நடவடிக்கையாக இருக்காது என பாகிஸ்தான் அதிகாரிகளிட தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

 Other Articles
•  13 May 2008 02:20:00 விரைவில் பில்லா பார்ட் டூ?
•  13 May 2008 01:53:00 கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2008
•  13 May 2008 01:50:00 தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும்
•  13 May 2008 01:32:00 உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
•  13 May 2008 01:30:00 பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் விரிசல்
•  13 May 2008 01:27:00 ஆசிய மகளிர் கிரிக்கட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன்
•  13 May 2008 01:16:00 தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் (மேலதிக தகவல்)
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 17:18:00 ஹிலாரி துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பளிப்பேன் - ஒபாமா
•  12 May 2008 17:05:00 ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
•  12 May 2008 17:01:00 சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் டெண்டுல்கர்?
•  12 May 2008 16:51:00 அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளவேண்டும் -அப்துல் கலாம்
•  12 May 2008 16:45:00 டாடாவின் நானேவுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் ரூ. 1 லட்சத்துக்கு கார்
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions